திடீர் கனமழையால் 12,000 நெல் மூட்டைகள் சேதம்.!! குமுறும் விவசாயிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வட மற்றும் உள் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 

இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

கனம் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாலும் விழுப்புரம் விவசாயிகளை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இதற்கு காரணம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

 

இதன் காரணமாக ஒழுங்கு முறை விற்பனை நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மழையில் நனைந்த நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகளும் உத்தரவிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paddy bundle soaked due to heavy rain in Villupuram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->