டிகேஎம்9 ரக நெல் கொள்முதல் இல்லை என தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


டிகேஎம்9 ரக நெல்லை கொள்முதல் செய்யப்போவதில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் முறைகளில் சில மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாட்டில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் டிகேஎம்9 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வகை நெல்லினை அரவை செய்து அதன் மூலம் பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருப்பதால், இந்த அரிசியினை பொது மக்கள் அதிகம் விரும்புவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழும் பொது மக்கள் இந்த அரிசியை வாங்க விரும்புவதில்லை என்றும், இந்த ரக நெல் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களும் கூட இவத்தை பயன்படுத்த விரும்புவதில்லை என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன் அடிப்படையில், டிகேஎம்9 ரக அரிசியினை பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் விரும்பாத நிலையில் அவற்றை விநியோகிப்பதைத் தவிர்க்கலாம் என அரசு முடிவு செய்து இருப்பதாகவும், எதிர்வரும் பருவத்திலிருந்து டிகேஎம்9 ரக நெல்லினை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதைக் கைவிட அரசு ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது சந்தையில் புழக்கத்தில் இருக்கும் பிற சன்ன ரக நெல் வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து பயன்பெறுமாறும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paddy farming


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->