விஜயகாந்திற்கு ''பத்ம பூஷன்'' விருது: பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வ தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

3 நாட்களுக்கு முன்பு எனக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. மறைந்த கேப்டன் விஜயகாந்த்திற்கு வருகின்ற 9 ஆம் தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. 

விருது பெற உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளதால் நானும் விஜயபாஸ்கரனும் விருது பெற டெல்லி செல்ல உள்ளோம். வெயில் காரணமாக பள்ளிகள் ஒரு வாரம் தள்ளி திறக்க வேண்டும். 

விஜயபாஸ்கர், விருதுநகர் தொகுதியில் ஒரு மாதம் தங்கி, எல்லா கிராமங்களுக்கும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டார். 

கேப்டன் உடைய மகன் இங்கே போட்டியிடுகிறார். இந்த மண்ணின் மைந்தர் அவருக்கு கண்டிப்பாக வெற்றி வாய்ப்பை தருவோம் என பெண்கள், இளைஞர்கள், புது வாக்காளர்கள் என அனைவரும் வாக்களித்ததாக கூறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Padma Bhushan Award to Vijayakanth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->