பழனி மலை கோவிலில் முதியவர் ஒருவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள்! பக்தர்கள் எதிர்ப்பு! - Seithipunal
Seithipunal


பழனி கோவிலில் முதியவர் ஒருவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பக்தர்கள் கோரிக்கை:

பழனி கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்யும் சிறுவர்கள், வயதான முதியவர்கள் எளிதாகவும் விரைவாகவும் செல்ல மின்இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று கிருஷ்ணகிரியை சேர்ந்த வயதான பக்தர் ஒருவர் பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மின்இழுவை ரெயில் மூலம் கீழே இறங்குவதற்காக முயன்றபோது அவரை ஊழியர்கள் ஏற்ற மறுத்துள்ளனர். 

இதனால் அந்த முதியவர் படிப்பாதையில் தனது இரண்டு கைகளை ஊன்றியபடியே தவழ்ந்து இறங்கி வந்ததை பார்த்த பக்தர்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.  

மேலும் பக்தர்கள் சிலர், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காகத்தான் மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவை இயக்கப்படுகிறது என எதிர்த்து கேள்வி எழுப்பினர். 

மேலும், "வி.ஐ.பிகள், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே ரோப்கார் உள்ளதா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம், முதியவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 

அதே போல் உடல்நலம் குன்றியவர்கள், கர்ப்பிணிகள் என யாரிடமும் பாகுபாடு காட்டக்கூடாது,  அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்" எனவும், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palani temple old man electric train stir


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->