தூத்துக்குடி : பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழா திடீர் நிறுத்தம்.. காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயிலின் 67வது திருவிழா இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவுக்கு தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். 

இந்த திருவிழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமத்துரை நினைவு ஜோதி கொண்டுவரப்படுகிறது. இந்த திருவிழாவில் 2 நாட்கள் மிகவும் விமரிசையாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்வதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 2000-கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே திருவிழாவில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க நேற்று மாலை 6 மணி முதல் 14 ஆம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் இருந்து புறப்பட்ட ஜோதியை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். 144 தடை உத்தரவு காரணமாக ஜோதியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panchalankurichi veerasakkadevi festival temporaryly stopped


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->