காகிதம் இல்லா சட்டப்பேரவை..புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் காகிதம் இல்லா சட்டப்பேரவை பயிற்சி முகாமை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதம் இல்லா சட்டப்பேரவையாக மாற்றும் விதமாக நேவா (NeVA) என்ற திட்டத்திற்கு மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் (Ministry of Parliamentary Affairs) முழு நிதியளிக்க இசைவு தெரிவித்து இருந்தது.

அதன் அடிப்படையில், ஒரு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பாராளுமன்ற விவகாரங்கள் துறையின் ஒப்புதல் 2022 ஆம் ஆண்டு பெறப்பட்டது. அதன் பின்னர் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் (Systern Integrator) கொல்கத்தாவை சேர்ந்த, நிம்பஸ் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் (Nimbus System Private Ltd.) என்ற நிறுவனம். ஜூலை 2024-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 8.16 கோடிக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.தற்போது, சட்டப்பேரவை வளாகத்தில் மின்னணு உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது. அதாவது,

1. சட்டப்பேரவை கூடத்தில் உள்ள உறுப்பினர்கள் இருக்கைகளில் கைக்கணினி கருவி (Tablet Device) பொருத்தும் பணி நிறைவடைந்துவிட்டது.

ii. தேசிய தகவல் மையத்தின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நெட்வொர்க் (NICNET) மூலம் அதிவேக இணைய சேவை (Internet Connection) வழங்கும் பணி நிறைவுபெற்றது.

மதிப்புமிகு சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை செயலக ஊழியர்கள் மற்றும் பிற அரசுத்துறை ஊழியர்களுக்கும் நேவா(NeVA) பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளிக்க, பிரத்தியேகமாக, அமைப்பு ஒருங்கிணைப்பாளர் (System Integrator) மூலம் சட்டப்பேரவை வளாகத்தில் நேவா பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, சட்டப்பேரவையில் எழுப்பப்படும் வினாக்களும் மற்றும் அதற்கான விடைகளும் நேவா (NeVA) மென்பொருள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசு துறை செயலர்(Secretary), துறை தலைவர் (Head of Department), அலுவலகத்தின் தலைவர்(Head of Office) மற்றும் பிற அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் நேவா(NeVA) மென்பொருளை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சட்டப்பேரவை செயலகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் கணினி மயமாக்கும் (Digitization) பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Paperless Assembly. Training for Puducherry MLAs


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->