#சற்றுமுன் || தமிழக அரசு பேருந்தை வழிமறித்து 4 பேருக்கு அரிவாள் வெட்டு.!
PARAMAKUDII NEAR ATTAEMPT MURDER
ராமநாதபுரத்தில் அரசு பேருந்தை மறித்து 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக தமிழகத்தில் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் மட்டும் அரசு பேருந்தில் இருந்து மீனவ பெண் ஒருவரும், நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று இரவு விழுப்புரத்தில் அரசு பேருந்தின் நடத்துநர், பேருந்தில் யாரும் இல்லாதபோது கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும் அரங்கேறி உள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கமுதக்குடி பகுதியில், தமிழக அரசு பேருந்தை வழிமறித்து 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரில் வந்த கும்பல் அரசு பேருந்தை வழிமறித்து தாக்கியதில் பழனி முருகன், வழிவிட்டான், அழகு முருகன், முருகன் ஆகிய 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. படுகாயமடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்தை வழிமறித்து 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
PARAMAKUDII NEAR ATTAEMPT MURDER