பெற்றோர்களே காலாண்டு விடுமுறைக்கு என்ன பிளான்?...இன்று இந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள்! - Seithipunal
Seithipunal


அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் ராமு கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு பின்னர் 9 நாட்கள் விடுமுறை விடப்படும் என்றும், ஆனால், நடப்பாண்டில்  செப்டம்பர் 28-ம்  தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை என 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டது.

எனவே  பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி காலாண்டுத்தேர்வு விடுமுறையை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று , நாளை மற்றும் ஞாயிறு வார விடுமுறை மற்றும் பள்ளிகள் காலாண்டு விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 395 பேருந்துகளும், நாளை 345 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parents what are your plans for the quarter holidays special buses to these towns today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->