காடு, மலைகளை அழிப்பவர்களை வெட்டுவேன் - அதிரவைத்த மன்சூர் அலிகான்!
Parliamentary Election Vellore Mansoor Aligarh Campaign
காடு, மலைகளை அழிப்பவர்களை வெட்டுவேன் என்று, தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மக்களவை தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் களமிறங்கியுள்ளார். இவருக்கு பலாப்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மன்சூர் அலிகான், மக்களை கவரும் வண்ணம் புதிய புதிய யுக்திகளை கையாண்டு வருகிறார்.
இந்த நிலையில், வேலூரில் வாட்டி வதைக்கும் 100 டிகிரி வெயிலை சமாளிக்க தனது பிரசார வாகனத்தில் தென்னை ஓலை பந்தல் அமைத்துள்ளார் மன்சூர் அலிகான்.
அந்த பந்தல் நிழலில் நின்ற படியே பேசிய மன்சூர் அலிகான், வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள காடு, மலைகளை அழித்து வருகின்றனர். நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்று வந்து காடு, மலைகளை, காப்பாற்றி, நீர் நிலைகள் அமைப்பேன், காடு, மலைகளை அழிப்பவர்களை வெட்டுவேன்" என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் மன்சூர் அலிகான்.
English Summary
Parliamentary Election Vellore Mansoor Aligarh Campaign