பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள்  தற்காலிகமானதே..பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்.! - Seithipunal
Seithipunal


பகுதி நேர ஆசிரியர்களின் பணி என்பது தற்காலிகமானது தான் என தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. அந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது என்பதை பணி நியமன ஆணையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது பணி தேவையில்லை என்று அரசு கருதினால் முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணி நீக்கம் செய்யப்படலாம்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் என்பது அரசு பணியிடங்கள் இல்லை. அந்த அடிப்படையில் அவர்களுக்கு பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Part time teachers temporary posting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->