சென்னைக்கு படையெடுக்கும் மக்கள் - கிளம்பாக்கத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.!
passangers croud in chennai kilambakkam bus stand
கடந்த மாதம் 31 ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி, சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், வழக்கமான பணிகளுக்கு செல்லும் விதமாக சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.
இதனால், ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அதிலும் குறிப்பாக சொந்த ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் சென்னை திரும்பும் பொருட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கினர். இதனால், பேருந்து நிலையம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது.
இங்கிருந்து திருவான்மியூர், பிராட்வே உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர். மாநகர பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு பயணிகள் ஏறிச் செல்கின்றனர். இதனால் கிளாம்பாக்கத்தில் இருந்து மாநகருக்கு செல்லும் மாநகர பேருந்துகளும் நிரம்பி வழிகிறது.
தொடர் விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை நோக்கி படையெடுத்ததால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
English Summary
passangers croud in chennai kilambakkam bus stand