46-வது பிறந்த நாளில் தடம் பதித்த வைகை எக்ஸ்பிரஸ் - கேக் வெட்டி பயணிகள் கொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


46-வது பிறந்த நாளில் தடம் பதித்த வைகை எக்ஸ்பிரஸ் - கேக் வெட்டி பயணிகள் கொண்டாட்டம்.!

1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் சென்னை - மதுரை இடையே வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. பகல் நேர விரைவு ரயிலான இது தென் மாவட்ட மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.

இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வருடத்திலேயே மீட்டர் கேஜ் ரயில் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்ற "இந்தியாவின் அதிவிரைவு ரயில்" என்ற பெருமையைப் பெற்றது. அதுமட்டுமல்லாமல், ஆசியாவிலேயே மீட்டர் கேஜே ரெயில் பாதையில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

இந்த ரயில் தினமும் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு, பிற்பகல் 2.35 மணிக்கு சென்னைக்கு சென்றடையும். இந்த ரயிலின் மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள் ஆகும். 

அதேபோல் சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் மதுரை வந்தடையும். இந்த நிலையில், தென்மாவட்ட மக்களின் போக்குவரத்து தேவைக்கு பெரிதும் சேவையாற்றி வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 46-வது பிறந்த நாளை இன்று பயணிகள் கேக் வெட்டியும், ரயில் ஓட்டுநர்களுக்கு மரியாதை செய்தும் கொண்டாடினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

passengers cake cut for vaigai express 46th birthday celebration


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->