வழி செலவுக்கு பணம் இல்லாமல் அபராதம் கட்டிய பயணிகள்..! - Seithipunal
Seithipunal


வெளியூர்களில் இருந்து, சென்னைக்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ரெயில் நிலையங்களில் கடைப்பிடிக்கும் விதிமுறைகள் அனைத்தும் தெரிவது கிடையாது. "பிளாட்பாரத்துக்குள் நுழைந்தால் டிக்கெட் எடுக்க வேண்டும்"  "டிக்கெட் இல்லாமல் ரெயிலில் பயணம் செய்யக்கூடாது" என்ற இரண்டு மட்டுமே எல்லோருக்கும் தெரியும். சில நேரங்களில் தெரியாத தவறுகளை தெரியாமல் செய்து பயணிகள் திண்டாடுவது உண்டு. 

அந்த வகையில், நேற்று மாலை 5 மணிக்கு புறப்பட்ட ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிப்பதற்காக, ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் டிக்கெட் எடுத்துள்ளார்கள். மாலையில் புறப்படும் ரெயிலுக்கு சிறிது நேரத்திற்கு முன்பே வந்து விட்டார்கள். எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் பிளாட்பாரம் கூட்டம் அதிகமாக இருந்ததால், மின்சார ரெயில்கள் செல்லும் 10 மற்றும் 11-வது பிளாட்பாரத்தில் வந்து அமர்ந்து ஓய்வு எடுத்து உள்ளார்கள். 

அங்கு வந்த இரண்டு பெண் டிக்கெட் பரிசோதகர்கள் அவர்களிடம் டிக்கெட்டை கேட்ட நிலையில், அவர்கள் ராமேஸ்வரம் ரெயிலுக்கு எடுத்து வைத்திருந்த டிக்கெட்டை காட்டியதும், இந்த டிக்கெட்டை வைத்துக்கொண்டு இந்த பிளாட்பாரத்துக்கு வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்கள். 

அவர்கள் எங்களுக்கு இதெல்லாம் தெரியாது மேடம் என்று கூறிய பிறகும் டிக்கெட் பரிசோதகர்கள் கேட்காமல் அபராதம் கட்டியே தீர வேண்டும் என்று தெரிவித்தார்கள். இதைக்கேட்டு, பெண் பயணிகள் பரிசோதகர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பயணிகள், தெரியாமல் செய்த தவறுக்கு ஏன் அபராதம் கட்ட வேண்டும். மன்னித்தாவது விடலாமே என்று கேட்டு கெஞ்சினார்கள். அனால், அந்த டிக்கெட் பரிசோதகர்கள் கொஞ்சம்கூட காதில் வாங்கவில்லை.

இதனால், அந்த பிளாட்பார்மில் சுமார் அரைமணி நேரம் பரபரப்பாக இருந்தது. அங்கு வந்த பயணிகளும் தெரியாமல்தானே வந்திருக்கிறார்கள். மன்னித்து விட்டால் என்ன? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆனாலும் அவர்கள் விடவில்லை. கடைசியில் ரூ.1040 அபராதம் கட்டி விட்டு சென்றார்கள். வழிச்செலவுக்கு வைத்திருந்த பணத்தை அபராதம் செலுத்திவிட்டு திக்குமுக்கு ஆடிய நிலையில், அவர்கள் பயணத்தை தொடங்கினார்கள். 

ரெயிலில் செல்வதற்கும், ரெயில் நிலையங்களுக்கு செல்வதற்கும் பல விதிமுறைகள் இருக்கலாம். அவற்றை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நுழைவு வாயிலிலேயே பெரிய அளவில் விளம்பரப்படுத்தலாம். வெறும் டிக்கெட்டை மட்டும் வைத்துக்கொண்டு கைச்செலவுக்கு 100 அல்லது 200 ரூபாயை வைத்துக்கொண்டு ஊர்களுக்கு செல்லும் எத்தனையோ பயணிகள் இருக்கிறார்கள். 

அவர்களை எல்லாம் இப்படி நெருக்கடிக்குள் தள்ளினால் அவர்கள் நிலை என்னவாகும்? என்பதை நினைத்து பார்க்க வேண்டும். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Passengers paid fines without money for travel expenses


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->