பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழைய தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! - Seithipunal
Seithipunal


பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை அதே இடத்தில் வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், இந்து மதத்தில் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு பலகை, பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது.

மேலும், பல இந்து கோவில்களிலும் இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் பழனி முருகன் கோவிலில் இந்த அறிவிப்பு பலகை திடீரென அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாற்று மதத்தை சேர்ந்த சிலர், விஞ்ச் ரயில் மூலம் முருகன் கோயிலுக்கு செல்ல முயன்றதாகவும், அவர்களை கோவில் பணியாளர்கள் திருப்பி அனுப்பியதாகவும் சொல்லப்பட்டது.

இதனையடுத்து, பழனி முருகன் கோவிலுக்குள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு பலகை கோவிலின் முன்பு வைக்கப்பட்டு வைக்கப்பட்டு, பின்னர் அது அகற்றப்பட்டது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதி, உடனடியாக அகற்றப்பட்ட அந்தப் பலகை மீண்டும் அதே இடத்தில் அதே இடத்தில் வைக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pazhani Murugan temple only Hindu Notice board issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->