பணம் கேட்டு மிரட்டிய போலீஸ்! அதிகாலையில் இளைஞர் எடுத்த முடிவு! பென்னாகரத்தில் பெரும் பரபரப்பு!
Pennakaram police yonug man death case
காவல்துறையினர் மிரட்டிப் பணம் பறித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பென்னாகரம் அருகே பிலியனூர் பகுதியைச் சேர்ந்த ரைஸ் மில் உரிமையாளர் முனியப்பனின் மகன் புகழேந்தியிடம் (வயது 28) தனியார் விடுதி நிர்வாகிகளால் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புகழேந்தி இதற்காக பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும், காவல் உதவி ஆய்வாளரே அவரை தொடர்ந்து மிரட்டி, கடந்த மூன்று ஆண்டுகளாக பணம் பறித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பணத்தை திருப்பி வழங்க கடன் வாங்கி, வீட்டு நகைகளை அடகு வைத்ததன் காரணமாக குடும்பத்தினர் உண்மை தெரிய வந்தது. இதனால் மனா உளைச்சலுக்கு ஆளான புகழேந்தி தனது ரைஸ் மில்லில் இன்று அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதன் எதிரொலியாக, உறவினர்கள் பென்னாகரம் அம்பேத்கர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கலைக்கப்பட்டது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104,
சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050.
English Summary
Pennakaram police yonug man death case