ஒரு வருஷமா தண்ணீர் வரல.. திமுக எம்எல்ஏ-வை சுத்து போட்ட பொதுமக்கள்..!! - Seithipunal
Seithipunal


இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு வந்த திமுக எம்எல்ஏவை தண்ணீர் வழங்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு காரில் ஏறவிடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன் தலைமையில் திமுக அரசின் இரு ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அப்பொழுது அங்கு வந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக தண்ணீர் வழங்கப்படுவதில்லை என கூறி திமுக எம்எல்ஏ உதயசூரியனை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்து செல்ல முயன்ற திமுக எம்எல்ஏ உதயசூரியனை அவருடைய காரில் ஏற விடாமல் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் திமுக எம்எல்ஏ வை மீட்டு அப்பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் கல்வராயன் மலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People besieged DMK MLA as no water supply in last one year


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->