வாந்தி, பேதி, வயிற்றுபோக்கு.. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை இயக்குனர்.!
peoples affected for vomiting and fever in floods affected places
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பரவியதால் எதிரொலியாக ஒவ்வொரு சனிக்கிழமையும், மாநிலம் முழுதும் மழைக்கால காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே உருவான மிக்ஜாம் புயலால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஒரு சிலர் வாந்தி, பேதி, வயிற்று போக்கு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
"மாநிலம் முழுதும், மழை பெய்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், 60,000 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். சிலருக்கு, வாந்தி, பேதி, வயிற்றுபோக்கு, காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படுகிறது. இந்த பாதிப்பு, பெரியளவில் இல்லை.
இருப்பினும், மழை காலங்களில், தண்ணீரில் கழிவுநீர் கலக்கும் போது, இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். குடிநீரை நன்கு காய்ச்சி அருந்தினால், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ளலாம்" என்றது தெரிவித்தார்.
English Summary
peoples affected for vomiting and fever in floods affected places