மெரினாவில் நிலாச்சோறு சாப்பிட ஓர் அறிய வாய்ப்பு.!
peoples moon soru in merina beach for national science day
நாளை மறுநாள் (28-ந்தேதி) தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, சென்னை ஆஸ்ட்ரோ கிளப் உள்ளிட்ட சில அமைப்புகள் மக்கள் மத்தியில் வானவியல் அறிவியலை ஊட்டுவதற்கு வித்தியாசமான முறையில் "நிலாச் சோறு" என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த நிலாச் சோறு நிகழ்ச்சி இன்று மாலை மெரீனா கடற் மணற்பரப்பில் பாரதியார் சிலை அருகே நடைபெற உள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி பற்றி அஸ்ட்ரோ கிளப் பொதுச் செயலாளர் உதயன் கூறியதாவது:-
"வானியல் அறிவியல் ஆர்வத்தை மக்களிடையே தூண்டுவதற்கான ஏற்பாடுதான் இந்த நிகழ்ச்சி. இதில், முதல்கட்டமாக சென்னை மாவட்டத்தில் 16 இடங்களில் நடத்தப்படுகிறது. அதன் படி, இன்று மெரினாவிலும், கிண்டியிலும் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் 9 மணிவரை நடக்கிறது. இன்று கடற்கரையில் நான்கு தொலைநோக்கிகள் வைக்கப்பட்டிருக்கும். மக்கள் வெறும் கண்களால் பார்த்த நிலவை இன்று தொலைநோக்கி வழியாக பார்த்து ரசிக்கலாம்.
தொலைநோக்கி வழியாக நிலவை பார்க்க வருபவர்களுக்கு நிலாசோறாக எலுமிச்சை சாதம் அல்லது புளியோதரை வழங்கப்படும். இது ஒரு மக்கள் அறிவியல் திருவிழா. சென்னை முழுவதும் 200 இடங்களில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தின் மேல் தளத்தில் திறந்தவெளியில் நிகழ்ச்சி நடக்கிறது.
"நிலாச் சோறு" நிகழ்ச்சி எந்தெந்த இடங்களில் நடைபெறுகிறது என்ற விபரங்களை அறிந்து கொள்வதற்கு 9444453588 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
English Summary
peoples moon soru in merina beach for national science day