நள்ளிரவில் நடுரோட்டில் குவிந்த மக்கள் - செங்கல்பட்டில் நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கோடைகாலம் தொடங்கினாலே மின்வெட்டு அதிகளவில் ஏற்படும் நிலை உருவாகும். அதன் படி சென்னை புறநகர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அவ்வப்பொழுது மின் வெட்டு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் உள்ளது.‌ அதிலும் குறிப்பாக லோ- வோல்டேஜ் காரணமாக இது போன்ற மின் வெட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது.‌ 

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே பெருமாட்டு நல்லூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் நேற்றிரவு 9-மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

தொடர்ந்து போலீசார் மற்றும் மின்சார ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், விரைவில் மின்சாரம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். உடனே பாதிக்கப்பட்ட பகுதியில் சீர் செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.
 
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் பேசுகையில், "இரவு நேரங்களில் மின்சாரம் தடை ஏற்படுகிறது. கோடை காலம் என்பதால்,  குழந்தைகள், பெரியோர்கள் மின்சாரம் இல்லாமல் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.  இதனால், பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இது மட்டும் இல்லாமல்  இரவில் தூங்க முடியாததால்,  மறுநாள் காலை வேலைக்கு செல்வதும் பாதிக்கப்படுகிறது. எனவே மின்சாரத் துறை மற்றும் அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples strike Electricity Board Office in chengalpat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->