பெரம்பலூரில் அதிர்ச்சி : புதிய பேருந்து நிலையத்தில் ஆண் சடலம்..காவல்துறை விசாரணை!! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து சடலமாக இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் பல்வேறு நகரங்களுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பேண்ட் சட்டை அணிந்து உயிர் இழந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

இறந்து இருப்பதை உறுதி செய்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், இது தொடர்பாக பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறை, ஆணின் சடலத்தை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை, இறந்தவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆண் சடலமாக கிடந்த சம்பவம் அவ்வகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur new bus stand Men dead body police investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->