சீமானுக்கு காவல்துறை சம்மன்!
Periyar issue NTK Seeman
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து வழங்கிய சர்ச்சையான கருத்துக்கள் திராவிடர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடர் கழகம், பெரியாரிய இயக்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் அவரின் கருத்துகளை எதிர்த்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகம் முழுவதும் இந்த விவகாரத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில், சீமானுக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார்கள் அடிப்படையில், அவருக்கு மீது வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
தொடர்ந்து, பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், காவல்துறை சீமான் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, அவர் வரும் வெள்ளிக்கிழமை வடலூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் இன்று சீமான் இல்லம் அமைந்துள்ள நீலாங்கரைக்கு சென்று அவருக்கு அதிகாரப்பூர்வ சம்மன் வழங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அவர் காவல்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராவர் என்று தெரிகிறது.