பகாசூரன் படபாணியில் சென்னையில் விபச்சாரம்! சிக்கிய பெரும் புள்ளி! - Seithipunal
Seithipunal


சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியில் அழகு நிலையத்தில் விபச்சாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறை 6 பெண்களை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அழகுநிலையம் என்ற பேரில் பலர் விபச்சாரம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் மும்பையில் ஷபா என்ற பேரில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டு. பெண்களை மீட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் புஷ்பாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீடு எடுத்து வாடகை வீட்டில் ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கான அழகு நிலையம் செயல்பட்டு வந்துள்ளது.

ரகசிய தகவலில் பேரில் போலீசார் சோதனை நடத்தினர் . அப்போது வெளியூரிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களை குறிவைத்து அழகு நிலையத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியதாக பாடிக்குப்பம் பகுதியை சேர்ந்த  பவுன்சர் தினேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 6 பெண்களை மீட்டு கூர்நோக்கு காப்பக்கத்தில் ஒப்படைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள ஜெயகுமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

person who committed prostitution in a beauty parlor was arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->