காதலர்களுக்கு இடையூறு செய்பவர்களை கைது செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சமீப காலமாக திருவிழாவைப் போல் காதலர் தினத்தை மக்கள் கொண்டாடுகின்றனர்.

காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது டூடுலை மாற்றியுள்ளது. அதேபோன்று டென்மார்க் நாடு கடந்த 1990ம் ஆண்டு முதல் காதலர் தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இவ்வாறு உலகம் முழுவதும் காதலர் தினத்தை கொண்டாடும் நிலையில் இந்தியாவில் ஒரு சிலர் எதிர்கின்றனர்.

காதலர் தினம் என்பது இந்திய கலாச்சாரத்திற்கும் பண்பாட்டுக்கும் எதிரான செயல் என சிலர் எதிர்க்கின்றனர். தங்களது எதிர்ப்பை கழுதைகளுக்கு, நாய்களுக்கு திருமணம் செய்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் பொது இடங்களில் இருக்கும் காதலர்களை மிரட்டுவது, தாக்குவது, கட்டாய திருமணம் செய்து வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் காதலர் தினத்தை முன்னிட்டு சமூகவிரோதிகள் சிலர் காதலர்களை தாக்குவது காதலுக்கு எதிராக சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். காதலர்களுக்கு இடையூறு செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petition to DGP office to arrest who disturb lovers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->