பெண்ணை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு! அதிகாலையிலேயே மதுரையில் பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


பால் பண்ணை உரிமையாளர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் கருகின!!

மதுரை மாவட்டம் கீழப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் சுமதி என்பவர் கணவன் இறந்த நிலையில் இவர் சொந்தமாக பால் பண்ணை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சுமதியின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் வீட்டின் ஜன்னல் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். 

இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் தீயணைப்பு துறையினர் வீட்டினுள் சிக்கிய சுமதியை மீட்க சென்ற போது அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். 

இதனை தொடர்ந்து அவரை மீட்ட தீயணைப்பு துறையினர் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பிய ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol bomb hurled on dairy owner house in Madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->