சுற்றுலா சென்ற வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து.. 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 18 பேர் வேன் மூலம் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுரை ஐகோர்ட்டு கிளை அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதியது. 

இந்த கொடூர விபத்தில் வேனின் முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சிக்கி ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மதுரை ஒத்தக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தண்ணீர் லாரியை நடு ரோட்டில் நிறுத்தி வைத்த லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Picnic van Accident in madurai 2 people death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->