3 மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. குவியும் சுற்றுலா பயணிகள்.!
Picnicers allowed kovai Kutralam waterfalls
3 மாதத்திற்கு பிறகு கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தளம் கோவை குற்றாலம். இங்கு ஏராளமான வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வாகனங்களில் அழைத்து செல்வதற்கு வனத்துறையினர் தனியாக கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அறிவியல் மகிழ்ச்சியாக குளித்து செல்கின்றனர்.
மேலும், அடுத்து ஒரு வாரம் தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Picnicers allowed kovai Kutralam waterfalls