சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு.. சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை.!
Picnicers not allowed in suruli waterfalls
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாகவும், அமாவாசை போன்ற நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் விளங்கி வருகிறது.
தமிழக - கேரள எல்லையில் இந்த அருவி அமைந்திருப்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் அருவியில் நீராடி செல்வது வழக்கம். இது தவிர ஆண்டு முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
தற்போது சுருளி அருவியில் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் யானைகள் நடமாட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வனசரக அதிகாரி தெரிவிக்கையில் அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. யானையை விரட்டப் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாளை ஆடி 18ம் பெருக்கு என்பதால் அருவியில் ஏராளமானோர் நீராட வருகை தருவார்கள். இந்த நிலையில் வனத்துறையினரின் இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Picnicers not allowed in suruli waterfalls