சென்னை : போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க வேண்டுமா?
Plan To Create Bicycle Lane in Chennai
தமிழகத்தின் தலைநகரான சென்னை பெரு நகரத்தில் வளர்ச்சித் திட்டத்தை ஏற்படுத்த மூன்றாவது திட்டம் தயாரிக்கும் பணியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வருகிறது.
அந்த திட்டத்தின் கீழ் சென்னையில், சாலைகளில் மிதிவண்டி ஓட்டுபவர்களுக்காக புதிய வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில், சென்னையில் மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கு என்று தனிப் பாதை அமைப்பது, அதற்கு ஏற்ப பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்களில் சைக்கிள் வசதி ஏற்படுத்துவது உள்ளிட்டவைக் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும், மிதிவண்டி ரேசிங் மற்றும் பொது இடங்களில் மிதிவண்டிகளை நிறுத்துவதற்கான வசதிகளை அறிமுகம் செய்வது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த புதிய வசதிகள் தொடர்பாக, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நெதர்லாந்து நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தச் முடிவு செய்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல், இந்த திட்டங்கள் முக்கிய பெருநகரங்களில் சாத்தியமாகாது என்றும், அதே நேரம், இந்த திட்டம் இயற்கை சுற்றுச்சூழல்களுக்குச் சிறப்பாக அமையும் என்று பலதரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
English Summary
Plan To Create Bicycle Lane in Chennai