வெளியானது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்ததையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் இந்த இணைய தளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதேபோல், பொறியியல் மாணவர் சேர்க்கை்கான ஆன்லைன் பதிவும் இன்று முதல் தொடங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

plus 2 result released in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->