சைக்கிள் பெல் அடித்தது குத்தமா? சிகிச்சை பெற்று வரும் பிளஸ்-2 மாணவர்!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல், கோவிலூர் பகுதியை சேர்ந்த பொன்னிவளவன் (வயது 17) என்பவர் கே. ராமநாதபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். 

இவரது பள்ளியில் நேற்று அரசின் இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது. மிதிவண்டியை பெற்றுக்கொண்ட பொன்னிவளவன் பெல் சரியாக அடிக்கிறதா என சரி பார்த்துள்ளார். 

இவர் தொடர்ந்து பெல்லை அடித்துக் கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த தலைமையாசிரியர் மாணவரின் காதில் பலமாக தாக்கியுள்ளார். 

இதனால் மாணவர் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாணவரின் மாமா ஜெயமுருகன் தெரிவித்திருப்பதாவது, மாணவரை சிறிய விஷயத்துக்காக தலைமையாசிரியர் அடித்ததால் அவருக்கு காது வலி ஏற்பட்டுள்ளது. 

மாணவர்களின் நலன் கருதி இது போன்ற செயலில் ஆசிரியர்கள் இனிமேல் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தலைமை ஆசிரியர் அடித்து மாணவர் மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

plus 2 student injured attack by headmaster


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->