தமிழகத்திற்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி!
PM Modi Announce Textile Park for Tamilnadu
தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்த பிரதமர் மோடியின் அந்த அறிவிப்பில், "நாட்டில் 7 மாநிலங்களில் (தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம்) ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.
'மித்ரா மெகா ஜவுளி பூங்காக்கள்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தால், ஜவுளித்துறையை மேலும் வலுப்படுத்த உதவும்.
நாட்டில் தற்போது புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த 7 ஜவுளி பூங்காக்கள் ஜவுளித்துறைக்கான அதிநவீன உள்கட்டமைப்பை வழங்கும்.
கோடிக்கணக்கான முதலீட்டை ஈர்க்கும் வகையிலும், லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கும் வகையிலும், மேக் இன் இந்தியா மற்றும் 'மேக் ஃபார் தி வேர்ல்ட்' என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும்.
இந்த திட்டம் நம் நாட்டின் ஜவுளித் தொழிலுக்குப் புத்துயிர் அளிக்கும். பல்வேறு வகையான ஜவுளிகளுக்கான உலகளாவிய மையமாக நம் நாடு மாற இது உதவும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
English Summary
PM Modi Announce Textile Park for Tamilnadu