வேதனையில் பிரதமர் மோடி! தமிழக பாஜக முன்னாள் எம்.பி திடீர் மரணம்!  - Seithipunal
Seithipunal


கோவை, பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனி பகுதியில் வசித்து வந்த பாஜக முன்னாள் எம்பி மாஸ்டர் மாதன்  நேற்று இரவு வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93.

நீலகிரி மக்களவையில் தொகுதியில் பா.ஜ.க சாராபாய் கடந்த 1998 மற்றும் 199-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2 முறை எம்பியாக பதவி வகித்தவர் மாஸ்டர் மாதன். 

மேலும், தமிழக பா.ஜ.கவின் துணைத்தலைவராகவும் பதவி வகித்த மாஸ்டர் மாதனுக்கு, சரஸ்வதி அம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.

வயது மூப்பு காரணமாக அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நேற்று இரவு 11.10 மணிக்கு மாஸ்டர் மாதன் காலமானார்.

மாஸ்டர் மாதன் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக அவரின் இலாத்தில் வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் இன்று காலை முதல் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ்டர் மாதன் மறைவு வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தன் சமூக சேவை முயற்சிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உழைத்ததற்காகவே மாஸ்டர் மாதன் நினைவு கூறப்படுவார். மாஸ்டர் மாதனின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Condolence Master Mathan BJP Ex MP 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->