ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள் - பிரதமர் மோடி..! - Seithipunal
Seithipunal


43 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முயன்று கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் முன்னாள் எம்பி கீதா கோரா உட்பட மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், "ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் வாக்களிக்குமாறு அனைத்து வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

முதல்முறையாக வாக்களிக்கப் போகும் எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்றுத் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 20-ந்தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளதுடன், நவம்பர் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi tweet about jarkhant election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->