ஸ்டாலினுக்கு பயம் - அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


1987-ல் நடைபெற்ற இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில், தனது இன்னுயிரை தியாகம் செய்த தியாகி, சேலம் - சிவதாபுரம் குப்புசாமிக்கு புதிய வீடு கட்டி கொடுத்து திறந்து வைத்து தியாகி குப்புசாமி அவர்களின் குடும்பத்தினரிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று ஒப்படைத்தார்.

பின்னர் அவர் தெரிவித்தாவது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு தயக்கம் இல்லை. அவருக்கு பயம் ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தின் படி பஞ்சாயத்து தலைவருக்கு கூட சாதிவாரி கணக்கெடுப்பு (சர்வே) நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது.

முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்கிறாரா ஸ்டாலின்? முதல்வர் ஸ்டாலினுக்கும் சமூக நீதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதாரண பணி. இதை நடத்தினால் இட ஒதுக்கீடு தெரிந்து விடும்.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு உடனே நடத்த வேண்டும். தமிழக அரசின் உரிமைகளை மத்திய அரசுக்கு தாரை வார்க்க கூடாது. சமூக நீதிக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு தான் முழு பலன் கிடைக்கும் என்றால், தமிழகமே இந்த மேகதாது அணையை கட்டிக் கொள்ளட்டும். 

கர்நாடக மாநிலத்திற்கு தேவையான தண்ணீரை தமிழக அரசே திறந்து விட கர்நாடகா அரசுக்கு சம்மதமா என்று கேட்டு சொல்லுங்கள். இது என்னுடைய தனிப்பட்ட யோசனை" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss DMK MK Stalin Reservation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->