கோயம்பேடு: பசுமை பூங்காவை அமைக்க வேண்டும் - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
PMK Anbumani Ramadoss Koyambedu Green Park
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் இருந்த இடத்தில், பசுமை பூங்காவை அமைக்க வேண்டும் என்று, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவரின் செய்தி குறிப்பில், ஒரு பெரிய பசுமை பூங்காவை சென்னையின் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இதனை அமைக்க வேண்டும்.
மாறாக வணிக வளாகம், திரையரங்குகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவைகளை அந்த இடத்தில் அமைக்க கூடாது. மெட்ரோ மாநகரப் பேருந்து வசதிகளுடன் கோயம்பேடு இணைக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு வசதியாக இருக்கும்.
சென்னை பெருநகரில் பூங்காக்கள் உள்ளிட்ட பொது விதிகள் குறைந்து வருவதை மாற்ற வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கும் உரிய உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சிகளின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவரின் செய்தி குறிப்பில், அனைத்து சாதிய அர்ச்சகர்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட்டால் தான் சமத்துவம் மலரும், அனைத்து சாதிய அர்ச்சகர்களும் கோவில் கருவறையில் பூஜை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
பரம்பரை அர்ச்சகர்களால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வருகின்றன. இருதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Koyambedu Green Park