கள்ளச்சாரய விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களை கைது செய்ய வேண்டும் - திமுக ஆதரவு பத்திரிகையாளர் பகீர்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரத்தில் தற்போது வரை 57 பேர் பலியாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விவகாரத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சங்கராபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் இருவருக்கும் கலளசரய வியாபாரிகளுடன் தொடர்பு இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

மேலும், இவர்கள் இருவரும் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக நடந்துள்ளதால், இவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கையும் விடுத்திருந்தனர்.

பாமகவின் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த எம்எல்ஏக்கள் இருவரும், இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நாங்கள் அரசியல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுகிறோம் என்று தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே நேற்று மாலை கள்ளச்சாரய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திமுக எம்எல்ஏக்கள் இருவரையும் கைது செய்யக்கோரி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பாமக மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பாமகவை சேர்ந்த அருள், தனது சமூகவலைத்தள பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குற்றத்திற்காக இரண்டு எம்.எல்.ஏ-க்களை கைது செய்யாத வரை, அரசு நடத்தும் அனைத்தும் நாடகம் தான் என்று, திமுக ஆதரவு பத்திரிகையாளர் இராதாகிருஷ்ணன் (தி இந்து குழுமம்) கருத்து தெரிவித்துள்ளார் என்று அவரின் அந்த கருத்தையும் புகைப்படமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Arul tweet about Kallasarayam DMK MLA Link info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->