#BREAKING | பிரதமர் மோடியின் தியானத்திற்கு ஆப்பு! திமுக தரப்பில் பரபரப்பு மனு! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்வை ரத்து செய்யக்கோரி திமுக தரப்பில் தேர்தல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 30) மாலை கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். இதையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மே 30, 31 மற்றும் ஜூன் 1 தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளார்.

மோடியின் இந்த நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் தியான நிகழ்வை ரத்து செய்யக்கோரி திமுக தரப்பில் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையம் பிரதமரின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க கூடாது. ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMModi Kanniyakumari BJP DMK


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->