மாணவியை சாதியை சொல்லி திட்டிய பெரியார் பல்கலை., உதவி பேராசிரியர் மீது வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


சேலத்தில் கல்லூரி மாணவியை சாதிப்பெயரை சொல்லி திட்டியதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் உதவி பேராசிரியர் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவியை சாதிப்பெயரை சொல்லி திட்டியதாகவும், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெரியார் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த பிரேம் குமார் என்பவர், தனது வகுப்பில் பயின்ற மாணவி ஒருவரை சாதியின் பெயரை சொல்லி திட்டி, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து, சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் அந்த கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், உதவி பேராசிரியர் பிரேம்குமார் மீது பாலியல் தொல்லை கொடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தது, சாதிப்பெயரை சொல்லி திட்டியது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம், பெரியார் பல்கலைக்கழக நிர்வாக ஆட்சிக் குழு தொடர்பான, பணிநீட்டிப்பு தீர்மானம் குறித்த தகவல்களை வெளியேறிவிட்டதாக பிரேம்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police case file periyaar university professor premkumar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->