சிறுவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு! - Seithipunal
Seithipunal


ஈரோடு : சிறுவர்கள் ஓட்டி வந்த இருசக்கரவாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்து பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே போலீசார் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது 18 வயது நிரம்பாத சிறுவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து பெற்றோர்கள் உடனடியாக பத்ரகாளி அம்மன் கோவில் அருகே வந்தனர். அவர்களிடம் 18 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளிடம் இருசக்கர வாகனங்களில் ஓட்ட அனுமதிக்க கூடாது எனவும் அவ்வாறு கொடுப்பதால் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுகிறது என்று கூறினர்.

மேலும் பறிமுதல் செய்த 5 இருசக்கர வாகனங்களின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அந்தியூர் காவல் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களை கொண்டு சென்றனர்.

வாகனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவின் படி அபராதம் விதிக்கப்படும் எனப் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டது. 18 வயது நிரம்பாத சிறுவர்கள் ஓட்டி வந்த 5 இருசக்கர வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police confiscated the two wheelers the children were driving and registered a case against the parents


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->