என் மகள் தான் முக்கியம்..."காக்கி சட்டையே தேவையில்லை"..நடு ரோட்டில் அமர்ந்து காவலர் போராட்டம்..!! - Seithipunal
Seithipunal


சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் தனது மகளின் கால் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி தலைமை செயலகம் அருகே தலைமை காவலர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி இவருடைய 10 வயது மகள் பிரதிக்‌ஷா 3 வயது முதல் சிறுநீரக பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அரசு மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை கடந்த 5 வருடங்களாக சிறுமி உட்கொண்டு வந்த நிலையில் மாத்திரையின் எதிர்விளைவு காரணமான பிரதிக்‌ஷாவின் வலது கால் பாதத்தில் கடுமையான அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கோதண்டபாணி மீண்டும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்தவமனையில் தனது மகளை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அவர்கள் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிரதிக்ஷாவுக்கு இரத்த உறைவு ஏற்பட்டதாக தவறாக கணித்ததன் விளைவாக பாதம் கருகியதுடன் உடலில் உள்ள இரத்தம் கெட்டுப்போனதாக கூறப்படுகிறது.

மேலும் பெற்றோர்களின் அனுமதியின்றி இரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டதன் விளைவால் வலிப்பு நோயும் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சிய போக்கால் நடந்தது எனவும், மருத்துவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தலைமை காவலர்  கோதண்டபாணி பாதிக்கப்பட்ட தனது மகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காக்கி சட்டையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தலைமை காவலர் கோதண்டபாணியை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். தனக்கு நியாயம் வேண்டுமென பாதிக்கப்பட்ட தன் மகளுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வரை போலீசார் மிரட்டும் தோணியில் பேசியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் என் குழந்தைக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்க இந்த காக்கிச்சட்டை தடையாக இருக்கிறது என்றால் இந்த காக்கி சட்டையை எனக்கு தேவையில்லை என ஆதங்கமாக பேசியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக நியாயம் கேட்டு அனைத்து துறை அதிகாரிகளிடமும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவதாக தலைமை காவலர் கோதண்டபாணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் சென்னை தலைமைச் செயலகம் பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Constable protest demanding action against ill treatment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->