மதுரை || ரெயிலில் கடத்தப்பட்ட போதைப்பொருள் - விசாரணையை தீவிரப்படுத்தும் போலீசார்.! - Seithipunal
Seithipunal


சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயிலில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் படி கடந்த ஒன்றாம் தேதி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி பிள்ளமன் பிரகாஷ் என்பவரை மதுரை ரெயில் நிலையத்தில் மடக்கிபிடித்தனர். பிறகு அவரிடம் இருந்து 30 கிலோ மெத்தபெட்டைமைன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்ததோடு அவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் சென்னையில், உள்ள தனது வீட்டில் 6 கிலோ போதைப்பொருள் இருப்பதாக கூறியதையடுத்து, போலீசார் அதனையும் பறிமுதல் செய்தனர். மேலும், பிரகாஷ் மனைவி மோனிஷாவையும் கைது செய்து மதுரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்களிடம் போதைப்பொருளை ஒப்படைத்தால் 25 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும் என்றும், இந்தப் பணி மது அரங்கு கூடத்தில் கிடைத்த நட்பின் மூலம் கிடைத்தாகவும், இதில் தொடர்புடைய வேறு யாரையும் தனக்குத் தெரியாது எனவும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் பிரகாஷின் நெருங்கிய நண்பர்கள், அவரது தொலைப்பேசி அழைப்புகள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவைக் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர். இதன் மூலம் இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் என்றும், அவர்கள் மூலம் பல தகவல்கள் கிடைக்கும் என்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police deep investigation of drugs kidnape case in madurai railway station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->