கன்னியாகுமரி : பெண் காவலரிடம் அத்து மீறலில் ஈடுபட்ட வாலிபர்கள் - போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி : பெண் காவலரிடம் அத்து மீறலில் ஈடுபட்ட வாலிபர்கள் - போலீசார் வலைவீச்சு.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பைங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரெஜிலா. பெண் காவலராக பணியாற்றி வரும் இவர் நேற்று வழக்கம் போல் பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

இதையடுத்து இவர் கணபதியான்கடவு பாலம் பகுதியில் வந்துகொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் ரெஜிலா ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை இடித்துத் தள்ளும் விதமாக அச்சுறுத்தினர். இதைத் தொடர்ந்து ஆபாச மற்றும் கெட்ட வார்த்தைகளாலும் திட்டி மிரட்டியுள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பாக காவலர் ரெஜிலா போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் படி போலீசார் சம்பவ பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பெண் காவலரிடம் அத்துமீறியது மேல்மிடாலம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் மற்றும் அவரது நண்பர் அமலநாதன் உள்ளிட்டோர் என்பதுத் தெரிய வந்தது.  இதையடுத்து போலீசார் அவர்களைத் தேடி வந்தனர். இதையறிந்த அறிந்த அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

இருப்பினும் போலீசார் அவர்களது தீவிரமாகத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police enquiry to youths for violation of woman police in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->