பரபரப்பு! பிரபல ரவுடி துரைசாமி என்கவுண்டர்! போலீஸ் கூறிய முக்கிய தகவல்! - Seithipunal
Seithipunal


திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி என்கவுண்டர் விவகாரத்தில் காவல்துறை விளக்கம் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சியை சேர்ந்த துரைசாமி என்ற ரவுடியை புதுக்கோட்டையில் வைத்து காவல்துறை என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரவுடி துரைசாமி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி துரைசாமியை போலீசார் கைது செய்ய முயற்சித்த போது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.

ரவுடி துரைசாமியை நோக்கி சுட்ட நிலையில் துரைசாமி சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதனை அடுத்து அவரது உடல் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த என்கவுண்டர் விவகாரம் குறித்து போலீசார் அளித்துள்ள விளக்கத்தின் படி, ஆலங்குடி அருகே காட்டுப்பகுதியில் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சந்தேகத்திற்கு இடமாக இருவரை பிடித்து விசாரிக்க
முயன்றனர்.

ரவடி துரைசாமி போலீசாரை நாட்டு துப்பாக்கியால் சுட முயன்ற நிலையில் ஆய்வாளர் தப்பித்தார். மேலும் அறிவாளால் போலீசாரை வெட்ட முயன்றதால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி துரைசாமி காயமடைந்தார். ரவுடி துரைசாமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police explanation on Rowdy Duraisamy encounter issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->