#Breaking || மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது - முன்னெச்சரிக்கையாக கரூரில் போலீசார் குவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது - முன்னெச்சரிக்கையாக கரூரில் போலீசார் குவிப்பு.!!

தமிழகத்தின் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறைத் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான  இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்தவகையில் கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.

இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். 

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததன் எதிரொலியாக கரூரின் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதே போன்று அமைச்சர் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையிலும் கூடுதல் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் தமிழக போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police gather in karoor for minister senthil balaji arrest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->