சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்குள் புகுந்த நபர் யார்? - போலீசார் தீவிர விசாரணை.!! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்குள் புகுந்த நபர் யார்? - போலீசார் தீவிர விசாரணை.!!

பாஜக கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்கு கடந்த 12ம் தேதி மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து அறையின் கதவை பூட்ட முயன்றுள்ளார்.

அப்போது, அங்கு பணியில் இருந்த பணியாளர் ஒருவர் அந்த நபரை அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிட்டார். அதன் பின்னர் அந்த பணியாளர் உடனே சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அலுவலகத்திற்குள் புகுந்த நபரைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற நபர்  சிக்னல் அருகே இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. 
அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து போலீசார் உயிரிழந்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த நபரின் மார்பு பகுதியில் ஓம் சிவா என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர் ஏதேனும் இந்து அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police investigation case of man entererd vanathi seenivasan office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->