பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.!
police investigation school student harassment case in chengalpat
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் அருகே மாம்பாக்கம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி நேற்று மாலை 7 மணியளவில் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வீட்டின் அருகிலுள்ள புதர் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு மாணவியிடம் 3 பேர் பேச்சு கொடுத்துள்ளனர்.
அப்போது வாலிபர் ஒருவர் மாணவியின் பின்பக்கம் சென்று வாயில் துணியை வைத்து அழுத்திக்கொள்ள, மற்ற இருவரும் மாணவியை தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர் மூன்று பேரும் சேர்ந்து மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்து ஓடி வந்த மாணவி, நடந்ததை பொதுமக்களிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உருட்டுக் கட்டையுடன் குற்றவாளிகளை வலைவீசி தேடியுள்ளனர். இதில், ஒரு நபரை மட்டும் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த பொதுமக்கள், பாதிக்கப்பட்ட மாணவியை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு மேற்கொண்ட சோதனையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. உடனே, இந்த வழக்கு சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. காவல்துறையினர் மேலும், இருவரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
police investigation school student harassment case in chengalpat