பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தத் தடை - காவல் துறைக்கு அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தத் தடை - காவல் துறைக்கு அதிரடி உத்தரவு.!!

சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அனைத்து காவல் நிலையத்திற்கும் சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:- 

"பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியில் உள்ள காவலர்கள் பணி நேரத்தில் செல்போனைப் பயன்படுத்து கின்றனர். இதனால், அவர்களால் பணியை சரியாக செய்யமுடியாத படி கவனச் சிதறல் ஏற்படுகிறது. 

இந்த கவனச் சிதறலால் பல முக்கியப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்புப் பணி, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது.

அதுமட்டுமல்லாமல், கோவில் திருவிழாக்களில் பாதுகாப்புப் பணிகளின் போது கண்டிப்பாக செல்போனைப் பயன்படுத்தக் கூடாது. இந்தத் தகவலை பணியில் நியமிக்கும் போதும், பணியைப் பற்றி விவரிக்கும் போதும் காவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police officers not use cellphone on duty commissioner sandeep roy rathore order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->