மதுரையில் கடத்தப்பட்ட பள்ளி மாணவன்.. 3 மணி நேரத்தில் மீட்ட காவல் துறை..!!சினிமாவை மிஞ்சும் சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


மதுரையில் ஒரு பள்ளி மாணவன் ரூ 2 கோடி கேட்டு கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் அந்த கும்பலை 3 மணி நேரத்தில் பிடித்து மாணவனை மீட்டுள்ளனர். 

மதுரை எஸ். எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த மைதிலி ராஜலட்சுமி என்பவருக்கு பை - பாஸ் ரோடில் சில காம்ப்ளெக்ஸ் வீடுகள் உள்ளன. மேலும் இவரது மகன் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருவதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பிய மைதிலி ராஜலட்சுமியின் மகனையும், அவர் சென்ற ஆட்டோவையும் மறித்து ஒரு கும்பல் கத்தி முனையில் மாணவனோடு ஆட்டோ ஓட்டுனரையும் கடத்தியுள்ளது. இதையடுத்து மைதிலி ராஜலட்சுமிக்கு செல்போனில் தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல், அவரது மகனை கடத்தி இருப்பதாகவும், ரூ. 2 கோடியை எடுத்துக் கொண்டு தாங்கள் குறிப்பிடும் இடத்திற்கு வரும்படி மிரட்டியுள்ளது. இல்லையென்றால் மாணவனை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளது. 

இதையடுத்து மைதிலி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரை பதிவு செய்த காவல் ஆய்வாளர் காசி உள்ளிட்ட போலீசார், கடத்தல் கும்பலை செல்போன் சிக்னல் மூலம் கண்காணித்து, பின் தொடர்ந்துள்ளனர். ஆனால் போலீசார் தொடர்வதையறிந்த கடத்தல் கும்பல், மாணவனையும், ஆட்டோ ஓட்டுனரையும் செக்கானூரணி அருகே இறக்கி விட்டு தப்பித்து சென்றுவிட்டது. 

இதையடுத்து மாணவனையும், ஆட்டோ ஓட்டுனரையும் மீட்ட காவல் துறையினர் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்துள்ள இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Rescued A School Student Within 3 Hours Who Kidnapped for Money


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->