தமிழகம் முழுவதும் இன்று சொட்டு மருந்து முகாம்.!
polio drip camp in tamilnadu
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
இந்த மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இதன் காரணமாக இன்று ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக பொது சுகாதாரத்துறை. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடவுள்ளனர்.
இந்த சிறப்பு முகாம்கள் பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், சினிமா அரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
English Summary
polio drip camp in tamilnadu