அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகளுக்கு பாரபட்சம் பார்க்காமல் அபராதம் விதிக்க வேண்டும்..! - Seithipunal
Seithipunal


நான்கு சக்கர வாகனங்களில் உள்ள பம்பர் மற்றும் ஹாரன்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் வாகனங்களில், 'பம்பர்' அகற்றப்படவில்லை.

அரசு மற்றும் தனியார் கார், சரக்கு வாகனங்களில், விபத்து ஏற்படும் போது சேதம் ஏற்படுவதை தவிர்க்க, 'பம்பர்' பொருத்துகின்றனர். 'பம்பர்' பொருத்தாத காரில், 'சீட் பெல்ட்' அணிந்து செல்லும் போது, விபத்து ஏற்பட்டால் 'சென்சார்' உடனடியாக செயல்பட்டு, 'ஏர் பேக்' விரிவடைந்து, காரில் இருப்பவர்களின் உயிரை காக்கும். 

ஆனால், 'பம்பர்' பொருத்திய கார், விபத்துக்குள்ளாகும் போது, ஏற்படும் அதிர்வுகளை பம்பர் தாங்கிக்கொள்வதால், 'சென்சார்' செயல்படாமல்,'ஏர் பேக்' விரிவடையாமல் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால், நீதிமன்ற உத்தரவுப்படி, காரில் செல்பவர்கள் மற்றும் எதிரே மோதும் வாகனங்கள், அவற்றில் பயணிப்போரின் பாதுகாப்பு கருதி, வாகனங்களில் 'பம்பர்' பொருத்த அரசுதடை விதித்துள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா முழுவதிலும், அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க உள்பட அனைத்து அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகளின் வாகனங்கள், 'பம்பர்' பொருத்தி சுற்றி வருகின்றன. பலரும் முகப்பு பகுதியில் பதிவு எண் கூட எழுதாமல், கோர்ட் உத்தரவை அவமதிதஹு உள்ளனர். இன்னும் சிலரோ, போக்குவரத்து சட்டத்தை மீறி, அதீத ஒளி எழுப்பும் முகப்பு விளக்குகள், அதிக இரைச்சல் ஏற்படுத்தும் ஹாரன்களை பொருத்தியுள்ளனர். 

இதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் கண்டுக்கொள்ளாமல் அலட்சியமாக இருக்கின்றனர்.அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகளின் வாகனங்களில், 'பம்பர்', தடை செய்யப்பட்ட ஹாரன், முகப்புவிளக்குகளை அகற்றி, பாரபட்சம் பார்க்காமல் அபராதம் விதிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Political parties and government officials fined


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->